பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புக்காகப் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தி வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் சற்று தணிந்துள்ளது.
இதற்காக டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்துக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்தபோது நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
ஆனால் பிரதமர் மோடியின் மீதான மரியாதை காரணமாகக் கூட்டத்தைச் சிறிது நேரம் நிறுத்திவிட்டு அவருடன் நெதன்யாகு ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.