திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பழனி நகர காவல்நிலையம் முன்பு 24ஆயிரம் சதுரடி பரப்பளவில் புதிதாக ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் இரண்டாவது கிளை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஷோரூமை பழனி கோயில் அறங்காவலர் குழு தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருமான சுப்பிரமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
ஷோரூமின் முதல் விற்பனையை சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அதனை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெபி சரவணன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன், கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.