நியூயார்க்கில் நடைபெற்ற Comic Con நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் வித்தியாசமான உடைகளை அணிந்து வந்தது கவனம் பெற்றுள்ளது.
மார்வெல், டிசி, அனிமே, டிஸ்னி கதாபாத்திரங்கள் உலகளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.
இந்தக் காமிக்ஸ் ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சிதான் காமிக் கான். அந்த வகையில் நியூயார்க்கில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
சூப்பர் ஹீரோ, வில்லன்கள், விலங்குகள், பறவைகள் எனப் பல்வேறு காமிக்ஸ் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குறிப்பாக நிகழ்ச்சியில் மக்களிடம் பேட்டி எடுத்த பெண் செய்தியாளர், Fantastic Four: First Steps திரைப்பட ஹீரோக்களின் உடையில் தோன்றியதும் கவனத்தை ஈர்த்துள்ளது.