திரையரங்குகளில் வெளியான 10 நாட்களில் தனுஷின் இட்லி கடை படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் உருவான இட்லி கடை படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.