ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கேய்சான் பவுண்டரிஸ் நிறுவனத்தில் வெல்டராகப் பணியாற்றி வந்த வெங்கடேசன், பணியின்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.
உடனடியாகச் சிகிச்சைக்காகச் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சம்பவம் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் ராணிப்பேட்டை – சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.