இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதிகளா என்றும், இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு சதிகளை முறியடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டடுள்ள அறிக்கையில், இனிப்பு மற்றும் பலகாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்து உணவு கட்டுப்பாட்டுத்துறை மிரட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
இந்துக்களின் பண்டிகையின்போது அரசு அதிகாரிகள் அறிவுரை, எச்சரிக்கை விடுக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு பட்டாசு வெடிக்க அறிவித்திருக்கும் கட்டுப்பாடு, தமிழக பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்துச் செயல்பட வேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.