மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்காகச் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்குக் கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதனை கேட்ட அவரது மனைவி பிரியா ஒரு கணம் கூட யோசிக்கால் தனது கிட்னியை கணவருக்குத் தானம் செய்ய முன்வந்துள்ளார்.
அப்போது தனது கிட்னி கணவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தால் அதுதான் தனது உண்மையான கர்வா சௌத் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பரிசோதனையில் ரத்த வகை மற்றும் கிட்னி திசுக்கள் சரியாக ஒத்திருந்தது தெரியவந்ததை அடுத்து பிரியாவின் ஒரு கிட்னி அவரது கணவருக்குப் பொருத்தப்பட்டது.
தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசிய புருஷோத்தமன், தனது மனைவி பார்வதி தேவி போன்றவள் எனவும் மரணத்தில் இருந்து தன்னை மீட்டுள்ளார் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.