திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகுமார் என்பவர் மத்திய உணவு அமைச்சகத்தின் கீழ் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்துதல் திட்டத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு தொழில் நிறுவனத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள், பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் ரத்தன் டாட்டாவை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளைத் தேசிய நன்கொடையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.