சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள T-DOME என்ற வான் பாதுகாப்பு அமைப்பை தைவான் அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாகப் பிரிந்து சென்றது. அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா முயற்சித்து வருகிறது.
இதற்காகத் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அடிக்கடி பதற்றத்தை உருவாக்கி வருகிறது.
இதற்கு முடிவு கட்டும் வகையில் புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது தைவான். அந்நாட்டின் தேசிய தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் தைவான் அதிபர் லாய் சிங்-டே. பாதுகாப்புக்காக அதிக செலவு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இந்தாண்டு இறுதியில் ராணுவச் செலவினங்களுக்கான சிறப்பு பட்ஜெட்டை முன்மொழிய உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் T-DOME என்ற வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தையும் அறிவித்தார். இது இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பைப் போன்றது எனக் கூறப்படுகிறது.