வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் நடப்பாண்டு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்திற்கான நோபல் பரிசை நார்வே குழுவினர் அறிவித்தனர்.
அதன்படி, வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவித்ததாக நோபல் பரிசு குழுவினர் தெரிவித்துள்ளனர்.