காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி மக்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
ஹெச்.ராஜா-வின் 69வது பிறந்தநாள் நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக ஹெச்.ராஜா முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் ஹெச்.ராஜா கேக் வெட்டினார். மேலும், தையல் இயந்திரம், வேட்டி மற்றும் சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.