வல்லரசு நாடுகளிடையே நடக்கும் வர்த்தக போரின் உச்சமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதித்துள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனடிப்படையில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறி இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார்.
அதனால் சீனாவை விடுத்து இந்தியாவை மட்டும் அதிபர் டிரம்ப் குறிவைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும், கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.