கணவரின் நலனுக்காக மனைவி கடைபிடிக்கும் கர்வா சவுத் விழா வட மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணமான பெண், நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவில் ஒரு சல்லடை, விளக்கு, குங்குமம் மற்றும் இனிப்புகளை ஒரு தட்டில் ஏந்தி, நிலவைச் சல்லடையால் பார்க்கும் நிகழ்வுதான் கர்வா செளத்.
கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக முழு நாளும் உண்ணாமல் இருக்கும் முக்கியமான பண்டிகையாக இது திகழ்கிறது.
அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற கர்வா செளத் விழாவில் முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, தங்கள் கணவர்களின் நலனுக்காகப் பஜனை பாடல்களை பாடி வழிபட்டனர்.