மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசின் அச்சுறுத்தலால் மக்கள் அமைதியாக இருப்பதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் அமச்சியாபுரம் கிராம மக்களிடம் கேட்டறிந்தனர்.
சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர், இனியும் தாமதப்படுத்தினால் போஸ்டர் அடித்து போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.