ஆப்பிரிக்காவில் அழிவின் விளிம்பில் இருக்கும் பண்டைய மொழியை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் 92 வயதான மூதாட்டி ஒருவர்.
உலகில் பல மொழிகளில் காலப்போக்கில் மக்களால் பேசப்படாமல் அழிந்துவிட்டன. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவின் பழங்கால மொழியான நு மொழியைப் பேசுபவர் இப்போது ஒருவர் மட்டுமே உள்ளார்.
அவருக்கு வயது 92. இந்நிலையில் தமது மொழியைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மூதாட்டி கத்ரீனா ஈசா.
(ப்ரீத்) பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறை மற்றும் கலாச்சார இழப்பு இருந்த போதும், கத்ரீனாவும் அவரது குடும்பத்தினரும் பண்டைய பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கப் போராடுகின்றனர்.