கோவையில் தனது மனைவியுடன் தவறாக பழகிய பெட்ரோல் பங்க் ஊழியரை கொலைசெய்துவிட்டு, கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சந்தோஷ்குமார் என்பவர், ரவிச்சந்திரன் என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது ரவிச்சந்திரனுக்கு தெரியவந்ததை அடுத்து, சந்தோஷை ரவிச்சந்திரன் பலமுறை எச்சரித்துள்ளார்.
ஆனாலும் சந்தோஷ் கேட்காததால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தனது நண்பர் நவீன்குமாருடன் சேர்ந்து சந்தோஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின்னர் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று இருவரும் சரணடைந்தனர்.