பாரதிய கலாசார சமிதி அறக்கட்டளை சார்பில் “விஜயபாரதம் தேசிய வார இதழின் தீபாவளி மலர்” சென்னையில் வெளியிடப்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் விஜயபாரதம் வார இதழின் அரங்காசிரியர் சந்திரசேகர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் விஜய பாரத தீபாவளி மலரை ஹிந்து பிரிமியம் பதிப்பாளர் பத்திரி சேஷாத்ரி வெளியிட, பி. ஸ்ரீராம், ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோர் அதனைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் ஸ்ரீராம், “விஜய பாரத தீபாவளி மலர்” அனைவரின் வீட்டிலும் பாதுகாக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் எனவும் தேசியத்தையும், தர்மத்தையும் மையமாக வைத்து இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.