தீபாவளி பண்டிகை அன்று மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டுமென கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
தீபாவளி நன்னாளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் பலர் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதாகவும் இளைஞர்கள் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்தில் சிக்கி உயிரிழப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினத்தில் மதுபானக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.