சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கெடு நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஏற்காடு பேருந்துநிலையம், படகு இல்லம், ஒண்டிக்கடை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் உணவுப் பொருட்கள், கோழிக்கழிவுகள் உள்ளிட்டவை கொட்டுப்பட்டுள்ளதாகவும் பல நாட்களாகவும் நகராட்சி நிர்வாகம் இவற்றை அகற்றவில்லை எனவும் கிராம மக்கள் புகார் கூறிஉள்ளனர்.
மேலும் இவற்றைக் கால்நடைகள் உண்பதால் அதற்கு நோய் தொற்று எற்பட வாய்ப்பு உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.