தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஆடு மேய்க்க சென்றவர் காட்டுப் பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
ஆர். வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முருகேசன், ஆடுகளை வழக்கம்போல் காட்டுப் பகுதிக்கு மேயச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் இருந்த காட்டுப்பன்றி ஒன்று முருகேசன் தாக்கி, கை கால்களை கடித்து குதறியுள்ளது.
முருகேசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காட்டுப்பன்றியை விரட்டினர். காயமடைந்த முருகேசனை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.