தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாக்கியின் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாததற்கும், தங்களுக்கும் சம்மந்தமில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியா வந்துள்ள தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அதற்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், அழைப்பிதழ்களை ஆப்கானிஸ்தானின் மும்பை தூதரக தூதர் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.