கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவிக்கும், சூலூர் பெட்ரோல் பங்க் ஊழியர் சந்தோஷூக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரவிச்சந்திரன், சந்தோஷை பலமுறை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சூலூர் பெட்ரோல் பங்கிற்கு சென்ற ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர் நவீன்குமார் ஆகியோர், சந்தோஷை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான காட்சி அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது. இதையடுத்து கொலையாளிகள் இருவரும் சூலூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.