பீகார் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு மாற்றாக, 100 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி அறிவித்துள்ளது.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காத அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 100 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
குறிப்பாக 3-வது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.