எல்பிஜி லாரி அசோசியேஷன் சங்கத் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகக் கூறி 300-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று லாரிகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.
தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகச் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான எல்பிஜி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி எல்பிஜி லாரி அசோசியன் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தலைவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், உறுப்பினரிடம் எந்தக் கருத்து கேட்பும் நடத்தாமல் அவர் இஷ்டத்துக்கு முடிவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு லாரியை இயக்க முடிவு செய்துள்ளனர்.