ஆஸ்திரேலியாவில் ஓடுபாதையில் விமானம் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 3 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.