நீலகிரி மாவட்டம் உதகையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது.
முக்கிய சாலைகளில் நிலவிய பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேலும், கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.