மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையொன்று இயங்கி வருகிறது.
இங்கு ஒடிசாவை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு இளநிலை மருத்துவம் பயின்று வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவில் மாணவி, தனது ஆண் நண்பருடன் இரவு உணவருந்துவதற்காக வெளியே சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த கும்பலொன்று மாணவியின் ஆண் நண்பரை தாக்கி அங்கிருந்து துரத்தியுள்ளது. பின்னர் மாணவியை இழுத்து சென்று மருத்துவமனை வளாகப் பகுதியில் அக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அந்த மாணவி அதே மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனைப் போலவே தற்போது மீண்டும் மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.