குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் அடிக்கடி பழுதான தனது ஓலா ஸ்கூட்டரை ஷோ ரூம் முன்பே தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக வாங்கிய ஓலா ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாவதாக அந்த வாடிக்கையாளர் பலமுறை சம்மந்தப்பட்ட ஷோ ரூமில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அதுகுறித்து ஷோ ரூம் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அவர் ஷோ ரூம் முன்பே தனது ஓலா ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.