தெஹ்ரீக்-இ-லபாய்க் அமைப்பை பாகிஸ்தானை பலமுறை பணயக் கைதியாகவே மாற்றி வைத்திருந்த வரலாறும் உண்டு. பாகிஸ்தான் ராணுவத்தின் பினாமியாகக் கருதப்படும் தெஹ்ரீக்-இ-லபாய்க் வளர்ந்தது எப்படி தற்போது பார்க்கலாம்…
தீவிரவாத இஸ்லாமிய குழு என்ற அடையாளத்தைக் கொண்டுள்ள தெஹ்ரீக்-இ-லபாய்க், வன்முறை வெறியாட்டங்களால் பாகிஸ்தானை பலமுறை பணயக் கைதியாக வைத்திருந்த வரலாறும் உண்டு. பாகிஸ்தானில் உள்ள பதற்றமான சூழ்நிலைக்குப் பின்னால் இருப்பதுதான் தீவிர வலதுசாரி இஸ்லாமிய குழுவான தெஹ்ரீக்-இ- லபாய்க்-தான்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், லபாய்க், ராணுவத்தின் பிரதிநிதியாக, பினாமியாகக் கருதப்படுவதுதான். பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டில் நேரடியாக இறங்காமல் அவ்வப்போது கிளர்ச்சியை தூண்டுவிட்டு குளிர்காய இந்தக் குட்டிப்படையை பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
லபாய்க் அணிவகுப்பும், மிருகத்தனமாகப் படையும் பாகிஸ்தானை மீண்டும் பணயக் கைதி என்ற சக்கரத்திற்குள் தள்ளியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளைப் போன்றுதான், உள்நாட்டு அரசியலை கையாள பாகிஸ்தான் ராணுவத்தால் தெஹ்ரீப்-இ-லபாய்க் உருவாக்கப்பட்டது என்றும், பாகிஸ்தான் அரசியலுக்கு கடிவாளம் போடும் வகையில் ராணுவம், லாபாயக் குழுக்களை Tisse paper ஆகப் பயன்படுத்துவதாகவும் லண்டனை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆரிஃப் ஆஜாகியா தெரிவித்திருக்கிறார்.
தீவிர வலதுசாரி பரேல்வி சன்னி குழுவான இந்த அமைப்பு காதிம் உசேன் ரிஸ்வியால் கடந்த 2015-ல் நிறுவப்பட்டது. இது இஸ்லாமாபாத்தை 21 நாள் முற்றுகையிட்ட பின்னர் 2017ம் ஆண்டு அரசியல் முக்கியத்துவம் பெற்றது. டிசம்பர் 2020 இல், பிரான்சில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கான பிரெஞ்சு தூதரை வெளியேற்றக் கோரி லபாய்க் போராட்டத்தில் குதித்தது.
2021ம் ஆண்டு இந்த அமைப்பு தடைசெய்யப்பட்ட நிலையில், அதன் தலைவர் சாத் ரிஸ்வி பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டார். அவரது மறைவுக்கு பின் மகன் சாத் ரிஸ்வித் 2020-இல் அந்தக் குழுவுக்குத் தலைமையேற்றார்.
எனினும் தடை விதிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அரசாங்கம் அதை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் இராணுவத்தால் அதன் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நவம்பர் 2021 இல், மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இம்ரான் கானின் பிடிஐ தலைமையிலான அரசு, ராணுவ ஆதரவுடன் லபாய்க் அமைப்புடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
அட்லாண்டிக் கவுன்சிலின் கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டுப் போராட்டங்கள், ராணுவம், தெஹ்ரீக்-இ-லபாய்க் அமைப்பு மற்றும் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தப்பட்ட பின்னரே முடிவுக்கு வந்தன.
ஐ.எஸ்.ஐ ஆதரவு ஒப்பந்தத்தில் இம்ரான் கானை பிரதமராக்க லபாய்க் உதவியது. குறிப்பாக, இம்ரானின் மனைவி புஷ்ரா பீபியின் ஊழல் குற்றச்சாட்டுகளை முனீர் எழுப்பியதைத் தொடர்ந்து, அப்போதைய ஐஎஸ்ஐ தலைவர் அசிம் முனீருடன் மோதும் வரை இம்ரான் கான் ராணுவ ஆதரவு பெற்ற தலைவராகவே கருதப்பட்டார்.
2021-ம் ஆண்டு புதிய ஐஎஸ்ஐ தலைவர் நதீம் அகமதுவின் நியமனம் தொடர்பாகக் கானுக்கும் அப்போதைய ராணுவத் தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவிற்கும் இடையே ஒத்துப்போனது.
போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் இருந்தபோதிலும், TLP கிளர்ச்சிக்குழு ஆயுதம் ஏந்தியது இல்லை. மாறாக, அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சமூகத்தில் கலந்துள்ளனர்.
பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் வசிக்கின்றனர். இன்று பாகிஸ்தானில் நாம் காணும் குழப்பம், பல தசாப்தங்களாக மதத்தை ஆயுதமாக்குவதால் தவிர்க்க முடியாத விளைவாகிவிட்டது. பாகிஸ்தான் இப்போது அதன் சொந்த முரண்பாடுகள் முடக்கப்பட்டு வருவதுதான் உண்மை.