தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியின் முக்கிய கடைவீதிகளில் புத்தாடை வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியின் முக்கிய கடை வீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
தொடர்ந்து அவர்கள் புத்தாடை மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் மக்களின் வருகையையொட்டி கடைவீதிகள் முழுவதும், ஆயிரத்து 327 சிசிடிவி கேமராக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.