மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், வேல் வழங்கும் விழா தென் சென்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மகா கந்த சஷ்டி விழாவானது வரும் 22 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 25 முதல் 27-ம் தேதி வரை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக வேல் வழங்கும் விழா கோடம்பாக்கத்தில் உள்ள தென் சென்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக சுவாமி மித்ரானந்த குரு மகாராஜ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொதுச்செயலாளர் பால.மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.