சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடலின் முன்பு அவரது மகனின் திருமணம் நடைபெற்றது.
தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் கடந்த 9ம் தேதி மரணம் அடைந்தார். அவரது இறப்பில் சந்தேகம் எழுந்ததால் பிரேத பரிசோதனை நீதிபதியின் முன்னிலையில் நடத்தப்பட்டது. பின்னர் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் இருந்த அவரது இளைய மகன் அஜித் குமார், பரோலில் வெளிவந்து தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். அதே சமயம், தந்தையின் உடலின் முன்பாகவே நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.