நெல்லையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தச்சநல்லூர் உதவி ஆய்வாளர் மகேந்திர குமார் தலைமையிலான காவல்துறையினர், நேற்று முன்தினம் ஊருடையான் குடியிருப்பு காட்டுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுஅருந்திக் கொண்டிருந்த ரவுடி அருண்குமார், ஹரிஹரன் ஆகிய இருவரை சுற்றிவளைத்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தனது சகோதரரை காவல்துறையினர் கைது செய்ததால் ஆத்திரமடைந்த அருண்குமாரின் சகோதரர் அஜித்குமார், தனது நண்பர்களுடன் இணைத்துத் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினார்.
இதைத்தொடர்ந்து, சுப்பராஜ் நகர், தென்கலம் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.