மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மெட்ரோ ரயிலுக்குள் சைக்கிளை பெண் ஒருவர் நிறுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் சைக்கிள் நிறுத்துவதற்கு ஏதுவாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண் பயணி ஒருவர் தான் கொண்டு வந்த சைக்கிளை ரயிலில் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மகிழ்ச்சியுடன் நிறுத்தினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.