நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அந்நாட்டு சிறையில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஜென் இசட் இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தினர்.
இதில் 75 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. பின்னர் அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நேபாளத்தில் போராட்டத்தின் போது சிறைகளில் இருந்து சுமார் 13,000 பேர் தப்பியோடியதாகவும், அதில் 540 பேர் இந்திய கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.