நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் இடைத்தரகர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து இடைத்தரகர்கள் சட்டவிரோதமாகக் கிட்னி பெற்ற விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கிட்னி விற்பனை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட தனி மருத்துவ குழுவினர் பள்ளிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், சிறுநீரக விற்பனையில் மோசடி நடந்துள்ளது உறுதியான நிலையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளிபாளையம் பகுதியில் விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், சிறுநீரக விற்பனை மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் ஆனந்தன், ஸ்டாலின் ஆகியோரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.