மடகாஸ்கரில் அதிபர் பதவி விலகக்கோரி ஜென்சி இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் ராணுவ வீரர்கள் சிலர் இணைந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா சில வாரங்களுக்கு முன்பு தனது ஒட்டுமொத்த அமைச்சரவையில் இருந்தவர்களையும் பதவி நீக்கம் செய்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும் போராடிய இளைஞர்கள், தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மடகாஸ்கரின் தலைநகரான அந்தனானரிவோ பகுதியில் டயர்கள் மற்றும் தடுப்புகளை எரித்துத் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட உத்தரவிட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்து ராணுவ வீரர்கள் சிலர் இளைஞர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.