தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் புது ரக பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள், பல்வேறு பட்டாசு ஆலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
குறிப்பாக, வந்தே பாரத் ரயில் வடிவிலான பட்டாசுகள், பீரங்கி பட்டாசுகள், ஆப்பிள், முயல் வடிவிலான பட்டாசுகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்நிலையில், பண்டிகை காலத்தையொட்டி பட்டாசு கடைகளில் குவியும் வாடிக்கையாளர்கள் விதவிதமான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.