பெங்களூருவில் விவசாயி ஒருவர் பாரம்பரிய உடையில் மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவை சேர்ந்த சஞ்சு என்பவர் Farmer Buying Luxury Car என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், உலகின் பல்வேறு சொகுசு கார்களை வாங்கி அதன் வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சஞ்சு பாரம்பரிய தேசி ஸ்வாக் உடையில் மாட்டு வண்டியில் சென்று ஒன்றரை கோடி மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரை வாங்கியுள்ளார்.
அதன் வீடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















