உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பேக்கரியில் உணவு பொருட்கள் மீது எலி ஓடிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் தயாரிக்கப்படும் மக்கான் மலை இனிப்புப் பொருள் பலருக்கும் விருப்பம் உடைய ஒன்று. இந்த மக்கான் மலை இனிப்புப் பொருள் தயாரிப்பது குறித்து லக்னோவில் உள்ள பேக்கரியில் ஊழியர் ஒருவர் செயல்முறை விளக்கம் அளித்தார்.
அப்போது இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது எலி ஓடியது. பின்னர் எலியை விரட்டிய ஊழியர் இனிப்பு பொருளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
இதுகுறித்த வீடியோ காட்சியை கடை ஊழியர்களே பதிவிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் நெட்டிசன்கள் இது மக்கான் மலை அல்ல, மவுஸ் கேக் என்றும் ரேட்மலை என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
சிலரோ, கடையின் பெயரைக் காட்டியதற்கு நன்றி, இனி அங்குச் செல்லக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.