வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்த வன்முறையும் நிகழவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு இந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதும், இந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாகச் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய முகமது யூனுஸ், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் போலியானவை எனக் கூறியுள்ளார்.