சீனாவின் ஜாங்ஜோ அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகளுக்காக எரிபொருள் ஏற்றும் பணிகள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சீனா தேசிய அணுசக்தி கழகத்தால் புஜியான் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை உலை வடிவமைப்பான ஹுவாலாங் ஒன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு அணு மின் அலகுகளைக் கொண்டுள்ள இந்த அணுமின் நிலையத்தின், அலகு 1 இல் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது அலகில் மின் உற்பத்தி பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி மின் உற்பத்தி பணிகளுக்காக இரண்டாவது அலகில் எரிபொருள்களை ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.