சென்னையில் ஆபரணத் தங்கம் விலைச் சவரனுக்கு 94 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு 94 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன்படி ஒரு கிராம் தங்கம் 245 ரூபாய் உயர்ந்து, 11 ஆயிரத்து 825 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆயிரத்து 960 ரூபாய் உயர்ந்து, 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுகிறது.
தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.