6-வது நாளாகத் தொடரும் எல்பிஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தத்தால், லாரி உரிமையாளர்களுக்கு 9 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2025-2030 ஆண்டுக்கான புதிய டெண்டர் அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன.
இதன் காரணமாகச் சுமார் ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலைக் கிடைக்காத சூழல் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து விதிகளைத் தளர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6-வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்தத்தால் லாரி உரிமையாளர்களுக்கு 9 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.