உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் பைக்கில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அதனைச் சற்றும் மதிக்காத அவர், அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்டவாளத்தின் மேலேயே வண்டியுடன் தடுக்கிக் கீழே விழுந்தார். உடனடியாக எழுந்த அவர், வாகனத்தைத் தூக்க முயற்சித்தார்.
அப்போது ரயில் வேகமாக அருகே வந்துவிடவே, பக்கவாட்டில் ஓடாமல், தண்டவாளத்தின் மீதே ஓடியதால் அவர் ரயில் மோதி உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.