வரலாற்றுச் சிறப்புமிக்கக் காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்பதாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காசா அமைதி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் சிறப்பு பிரதிநிதியாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்பதாகவும், இது பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது இந்தியாவின் நீண்ட கால உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ளார்.