நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தபோது, தலிபான் தாக்குதல் ஞாபகங்கள் துரத்தியதாக நோபல் பரிசு பெற்ற மலாலா கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் பெண்கள் கல்விக்காகப் போராடியதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது மலாலாவைத் தலிபான்கள் தாக்கினர்.
இதன் பின்னர் அவர் பிரிட்டனில் சிகிச்சைப் பெற்று உயிர்ப் பிழைத்தார். இந்நிலையில் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த மலாலா, ஆக்ஸ்போர்டில் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தபோது தலிபான்கள் தன் மீது நடத்திய தாக்குதலை நெருக்கமாக உணர்ந்தேன் எனத் தெரிவித்தார்.
பேருந்து, துப்பாக்கி வைத்திருந்த நபர், இரத்தம் என எல்லாவற்றையும் முதல் முறையாகப் பார்ப்பது போல இருந்தது எனவும் மலாலா கூறினார்.