2025ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் காட்டியதற்காக ஜோயல் மோகிர் இந்த விருதைப் பெறுகிறார்.
அதேபோல, படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சி கோட்பாட்டை கண்டுபிடித்ததற்காக அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசுத்தொகையில் 50 சதவீதம் ஜோயல் மோகிருக்கும், மற்ற இருவருக்கும் தலா 25 சதவீதம் வழங்கப்படும் என நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.