பாமக சட்டமன்ற குழு தலைவராக உள்ள ஜி.கே.மணியை நீக்கக் கோரி அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமகச் சட்டமன்ற குழுத் தலைவராக உள்ள ஜிகே மணியை நீக்க வேண்டும் எனச் சில மாதங்களுக்கு முன்பு அன்புமணி தரப்பில் சட்டமன்ற பேரவை தலைவருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.
அதே கோரிக்கையை வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எம்எல்ஏ வெங்கடேசன், பாமக சட்டமன்ற குழுத் தலைவர், துணைத் தலைவர், கொறடாவுக்குத் தனி இருக்கை வழங்க வேண்டும் எனச் சபாநாயகர் அப்பாவிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார். விரைவில் தனி இடம் ஒதுக்கப்படும் என நம்புவதாகவும் கூறினார்.