ராமதாஸுக்குச் சோதனை ஏற்பட்டுள்ளதால் தாங்கள் வேதனையில் உள்ளோம் எனப் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவரளித்த பேட்டியில்,
ராமதாஸுக்குச் சோதனை ஏற்பட்டுள்ளதால் வேதனையில் உள்ளோம் என்றும் பாமக இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருவது வேதனையாக உள்ளது என்று அவர் கூறினார்.
எம்எல்ஏவாக யாராக இருந்தாலும் ராமதாஸ் பின்னால் நிற்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கின்ற நியமனம் தான் செல்லும் என்றும் 2026-ல் ராமதாஸ் வெற்றிக் கூட்டணியாக அமைப்பார் என்று ஜி.கே.மணி குறிப்பிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்றும் மக்களுக்காகப் போராடாமல் கட்சிக்குள்ளே போராடுவது வினோதமானது என்று ஜி.கே.மணி ஆதங்கம் தெரிவித்தார்.